Advertisment

சென்னையில் 60 வார்டுகளில் தலா 10-க்கும் குறைவான கொரோனா நோயாளிகள்: ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

Corona in chennai : சென்னையில், கொரோனா காரணமாக நிகழ்நதுள்ள இறப்பு விகிதம் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown, tamil nadu, chennai, Covid 19, containment zones, chennai corporation, radhakirishanan ias, corona patients, corona tests, corona infections, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

சென்னையில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் 119 வார்டுகளில் 10க்கும் குறைவான பேருக்கே கொரோனா பாதிப்பு உள்ளதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

மே 10ம் தேதி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 2 வார்டுகளில் மட்டுமே 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், 60 வார்டுகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 10 முதல் 30 என்ற அளவில் உள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக கருதப்படும் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் அதிகளவில் நடைபெற உள்ளதால், அடுத்து வரும் தினங்களில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

வடசென்னை பகுதிகளில் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக சோதனைகள் நடைபெற்று வந்துள்ளன. இனி மற்ற பகுதிகளில் சோதனைகள் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதுவும் சென்னையில் தான் அதிகளவில் கொரோனா சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 19 கூடுதல் டீம்களை வைத்து சராசரியாக 3,500 பேர்களிடம் தினமும் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

சென்னையில், கொரோனா காரணமாக நிகழ்நதுள்ள இறப்பு விகிதம் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது. கெரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500படுக்கைகளுடன் கூடிய 32 கோவிட் கேர் சென்டர்கள் தயார்நிலையில் உள்ளன.

மக்களிடையே, கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னார்வ அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

முக கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் 30 சதவீத கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். பலர் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் திரிகின்றனர். அவர்களையும் முக கவசம், தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்துகிறோம்.

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக திகழ்ந்த கோயம்பேடு சந்தை, தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டதால், அவர்களது தொடர்பு கண்டறிம் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது தளர்வு படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. அபார்ட்மெண்ட்களில் கடந்த 28 நாட்களுக்கும் மேலாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது படிப்படியாக தளர்த்தப்பட உள்ளது. இந்த தளர்வு நடைமுறைகள், அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளிலும், அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ்களுக்கும் பொருந்தாது.

வெளிநாடுகளிலிருந்து சென்னை திரும்பியுள்ளவர்களுக்கு கொரோனா சோதனைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. சோதனை முடிவுகளை பொறுத்து அவர்கள் மருத்துவனைமகளிலோ அல்லது அவர்களது வீடுகளிலோ தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தவித்து வந்த ஒடிசா, ஜார்க்கண்ட் பீகார் மாநில தொழிலாளா்கள் ரயில்களின் மூலம் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநில தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி கிடைக்கப்பெறாததால், அவர்கள் மட்டுமே தற்போது சென்னையில் இருப்பதாகவும், விரைவில் அவர்களும் அவர்களது ஊர்களுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Greater Chennai Corporation Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment