தமிழகத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இன்று ( 25ம்தேதி) முதல் துவங்கப்பட்டுள்ள நிலையில், விமானநிலையத்திற்கு செல்ல பொது போக்குவரத்து வாகனங்களாகன கால் டாக்ஸிகள், ஆட்டோ ரிக்ஷாக்குள் உள்ளிட்டவைகள் இயங்க இன்னும் அனுமதிக்காததால், பயணிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
விமானநிலையம் செல்ல பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களை எடுத்துச்செல்ல விரும்பமாட்டார்கள். ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா, பயணிகள், விமானநிலையத்திற்கு செல்ல போதிய போக்குவரத்து வசதிகளை செய்துதருமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
நாள் ஒன்றுக்கு 25 சேவைகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், தாங்கள் மேற்கொள்ள இருந்த விமான பயணத்தை பெரும்பாலானோர் ரத்து செய்ய முன்வருவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முன்னதாக வெளியிட்டுள் செய்திக்குறிப்பில், நாள் ஒன்றுக்கு 53 விமானங்களின் வருகையும், 52 விமானங்கள் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 25 விமானங்களின வருகை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் வரும்போது காலியாக வந்தால், விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக இயக்கப்படும் விமானங்களில், வெளிமாநிலங்களில் தவித்து வந்த பயணிகளே வருவார்கள். அவர்கள் விமானநிலையத்திலிருந்து வீட்டுக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமானநிலையத்திலிருந்து ப்ரீபெய்டு டாக்ஸிகளை இயக்க மாநில அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தேசிய தலைவர் சுதாகர ரெட்டி கூறியதாவது, விமான போக்குரவத்து தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. மத்திய அரசு, இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் கலந்தோலோசிப்பதில்லை. முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த மாநில அரசுகள் தற்போது வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு விமான சேவைகளை இயக்க முன்வந்துள்ளன. பயணம் ரத்து ஆனாலோ அல்லது ரத்து செய்தாலோ பணத்தை எவ்வாறு திரும்ப பெறுவது போன்ற வழிமுறைகள் எதுவும் வகுக்கப்படாததால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளதாக ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil