தமிழகத்துக்கு 4 சிறப்பு ரயில்கள் - ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை
Special trains : கோவை- மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம் , திருச்சி -நாகர்கோவில் , கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ஏசி அல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது
தமிழகத்துக்கு குளிர்சாதன (ஏசி) வசதி அல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தற்போது 4வது முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாள்தோறும், ஏ.சி. அல்லாத 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார்.
கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் சிறப்பு ரயில்களை தமிழகத்திற்கு இயக்கப்பட வேண்டாம் என தமிழக அரசு ஏற்கனவே கேட்டுக்கொண்டது. இதனையடுத்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை.
கோரிக்கை : இந்நிலையில், தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கோவை- மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம் , திருச்சி -நாகர்கோவில் , கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ஏசி அல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை, ரயில்வே வாரியம், தென்னக ரயில்வேயின் பார்வைக்கு அனுப்பியுள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 4 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil