Tasmac open : மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
corona virus, lockdown, tamil nadu, Tn government, tasmac, DMK M K Stalin, Makkal needhi maiam, Kamalhaasan, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ள அரசின் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படும் எனவும் மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறக்கக்கூடாது பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் கண்டனம் : மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுகுறித்து ஸ்டாலின் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 500-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கமல் கண்டனம் : தமிழக அரசின் டாஸ்மாக் திறப்பு நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அபாயகரமான நடவடிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.