மது குடித்தவரின் உயிரைக் குடித்த மது அரக்கன் - திருச்சியில் பரபரப்பு
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவரின் பெயர் சரவணன் ( வயது 45) என்றும், அவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவரின் பெயர் சரவணன் ( வயது 45) என்றும், அவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
corona virus, lockdown, tamil nadu, tasmac, trichy, dead, police, investigation, body near tasmac shop, in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா பரவலை தடுக்க தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே, கடந்த மே 3ம் தேதி 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், மதுக்கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
Advertisment
Advertisements
இதனையடுத்து, 45 நாட்கள் இடைவெளிக்குப்பிறகு, தமிழகத்தில் மே 7 ம்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட துவங்கியுள்ளன. முதல் நாளிலேயே, நமது குடிமகன்கள் ரூ.170 கோடி மதிப்பிலான மது வகைகளை குடித்து தீர்த்துள்ளனர்.
திருச்சியில் சோகம் : திருச்சி மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில் உள்ள மது அருந்தி விட்டு படுத்திருந்தவர் உயிரிழந்துள்ளார். மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று மலைக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவரின் பெயர் சரவணன் ( வயது 45) என்றும், அவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil