இந்த மாதமும் ரேஷனில் சீனி, எண்ணெய், பருப்பு இலவசம்: தமிழக அரசு
Free rice in ration shops : இக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மொபைல்போனில், இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவர்கள் இம்மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலை கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Free rice in ration shops : இக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மொபைல்போனில், இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவர்கள் இம்மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலை கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
corona virus, lockdown, tamilnadu, chennai, free ration goods, edappadi palanichami, tamilnadu government, free rice, grams, november, minister kamaraj, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதமும், ரேஷனில் சீனி, எண்ணெய், பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisment
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ரேசன் கடைகளில் ஜூலை மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நவம்பர் மாதம் வரை அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் மாதம் வரை ரேசனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும். ஏற்கனவே அதிகபட்சமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்படும். ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும். பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இக் குடும்ப அட்டைதாரர்களுக்கு மொபைல்போனில், இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவர்கள் இம்மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலை கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil