மஞ்சள் காமாலையால் உடல்நிலை மோசமடைந்து மருத்துவ உதவி கிடைக்காமல் துபாய் நாட்டில் அவதிப்படும் தமிழக இளைஞர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ, பார்ப்பவர்கள் கல்நெஞ்சக்காரர்களாக இருந்தாலும் அவர்களது மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் இளைஞர் கணேஷ் குமார். இவர் கடந்த ஜனவரி மாதம் துபாய்க்கு வேலை தேடி சென்றார். கொரோனா பரவல் சார்ந்த பொருளாதார பிரச்சினை காரணமாக துபாயில் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் கணேஷ்குமாருக்கு, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக, அவருக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பது தாமதமான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக எதையுமே சாப்பிட முடியவில்லை, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, துபாயில் உள்ள இந்திய வெளிநாட்டு தூதரகத்திற்கு சென்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டேன். ஆனால் இன்னும் என்னால், நாடு திரும்ப முடியவில்லை . எப்படியாவது ஊருக்கு கொண்டு சென்று விட்டு விடுங்கள்.
இவர் பெயர் கணேஷ்குமார். ஊர் போடிநாயக்கனூர். துபாயில் இருக்கும் இவர் மரணத்தின் விளிம்பில் உள்ளார்.*
*இந்திய அரசு மனமிறங்கினால் தான், இவர் ஊர் வர முடியும்..*
*நோயினால் தினம் தினம் நிறைய பேர் செத்து கொண்டிருக்கும் இந்திய பிரஜையை தாயகம் திரும்ப விமான சேவைக்கு அனுமதிக்க வேண்டும் pic.twitter.com/pCZEnvlfmL— தமிழர்.???????????????????????????? (@BarisKhan16) May 20, 2020
அங்கே எனது அம்மா என்னை பார்த்துக் கொள்வார். கேரளாவில் விட்டு விட்டாலும் பரவாயில்லை. அங்கேயே இருந்து ஊருக்கு சென்று விடுகிறோம். வயிறு மிகவும் வலிக்கிறது. நீண்ட நேரம் உட்காரக்கூட முடியவில்லை. நான் இரண்டு நாட்களில் இறந்துவிடலாம், அப்படி இறந்தால் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்த கணேஷ்குமார் பெற்றோர், தனது மகனுக்கு, மருத்துவ உதவி கிடைக்கும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். கணேஷ்குமார் போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இந்தவிசயத்தில் உடனடியாக உதவ வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கணேஷ் குமார் விசயத்தில் நல்லது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.