ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த இளைஞர்களை போலீசார் நூதனமாக கையாளும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது’ என அரசும் போலீஸாரும் தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் பொதுமக்கள் பலரும் சாலைகளில் சுற்றுத் திரிந்த வண்ணம்தான் இருக்கின்றனர். அதிலும், கிரிக்கெட் விளையாடுவது, பைக் ரவுண்ட்ஸ் போவது என இளைஞர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவேயில்லை. லத்தியைச் சுழற்றி, தோப்புக்கரணம் போட வைத்து, திருக்குறள் சொல்லச் சொல்லி போலீஸாரும் விதவிதமான ட்ரீட்மென்ட்களை செய்துவருகின்றனர். எதுவும் பலனளிக்கவில்லை. இதற்கிடையே திருப்பூர் போலீஸார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
திருப்பூரில் ஊரடங்கு நிலை அமலில் உள்ள நிலையில், தேவையில்லாமல், 5 இளைஞர்கள் 2 வண்டிகளில் வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முக கவசம் அணியாத நிலையில், ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களிடம் ஏன் தேவையில்லாமல், வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று விசாரணை நடத்துகின்றனர்.பின். அவர்களை அங்கு நிறுத்த வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்சில் ஏற்றுகின்றனர். அவர்கள் ஆம்புலன்சில் ஏற மறுப்பு தெரிவிப்பதும், அதற்கு போலீசார் அவர்கள் குண்டுக்கட்டாக ஆம்புலன்சிற்குள் ஏற்றுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அவர்கள் ஜன்னல் வழியாக வெளியே தப்பிப்பதும், அவர்களை போலீசார் மீண்டும் உள்ளே தள்ளுவது போன்று வீடியோ உள்ளது. இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. அய்யோ காப்பாத்துங்கனு அந்த இளைஞர்கள் கதறுவதுமாக அந்த வீடியோ உள்ளது. இந்த வீடியோ, ச மூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil