Advertisment

சென்னை ஓட்டல்களில் கட்டண தனிமைப்படுத்துதல் அறைகள் : அரசு நடவடிக்கை

வெளிமாநிலங்களில் உள்ள 1.17 லட்சம் தமிழர்கள் தமிழகம் திரும்ப முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல், வெளிநாடுகளில் வசித்து வரும் 65 ஆயிரம் பேரும் தமிழகம் திரும்ப முடிவு செய்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, lockdown,tamil nadu government, rooms in hotels, paid quarantine, corona infection, quarantine, returnees, other states, abroad, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

அரசு சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சைக்கென போதுமான கட்டமைப்பு இல்லாததன் காரணத்தினால், பணம் செலுத்தி தனிமைப்படுத்தல், சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ஓட்டல்களில் தனி அறைகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் மேலும் அது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் தவித்து வந்த தமிழர்கள், மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர்.

டெல்லி வந்த அவர்கள், ராஜ்தானி உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் மூலம், தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 550 பேர், கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள தனி அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழத்திற்கு திரும்பியவர்களை, 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் போதுமான வசதி இல்லையென்று அவர்கள் குறை சொன்னதன் விளைவாக முன்னணி ஓட்டல்களிலும் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இந்த ஓட்டல்களில் அறைகள் ரூ.700 முதல் 2,500 வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மையங்கள் மற்றும் ஓட்டல் அறைகளில் அவர்கள் தங்கியிருக்கும் 14 நாட்களிலேயே அவர்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும்.

வெளிமாநிலங்களில் உள்ள 1.17 லட்சம் தமிழர்கள் தமிழகம் திரும்ப முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல், வெளிநாடுகளில் வசித்து வரும் 65 ஆயிரம் பேரும் தமிழகம் திரும்ப முடிவு செய்துள்ளனர்

தற்போதைய நிலையில், 4,401 பேர் மருத்துவமனைகளிலும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு சுகாதார மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி, ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், டில்லியில் இருந்து சென்னைக்கு ராஜ்தானி ரயிலில் வருவதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மே 15ம் தேதி பயணத்தை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Quarantine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment