Advertisment

தமிழ்நாட்டில், 'க்ளஸ்டர்' பாதிப்பு இல்லை.. ஆனாலும் இது அவசியம்: மா.சுப்பிரமணியன்

"தமிழகத்தில் 7,797 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது"- அமைச்சர் மா.சுப்ரமணியன்

author-image
WebDesk
New Update
minister m subramanian

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Advertisment

அதன் தொடர்பாக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாடு முழுவதும் மாதிரி பயிற்சி இன்றும் நாளையும் நடைபெறவிருக்கிறது. இதில், மருத்துவமனையில் இருக்கின்ற படுக்கைகள் எண்ணிக்கைகள், வெண்டிலேட்டர் வசதிகள், பயிற்சிபெற்ற மருத்துவர்கள் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள், மருத்துவ பணியாளர்கள் எவ்வளவு பேர் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள், கோவிட்- 19 பரிசோதனைகளுக்கான வசதிகள் என்னென்ன இருக்கிறது, மருத்துவமனையில் மாத்திரை மருந்துகளின் இருப்பு எவ்வளவு இருக்கிறது, முகக்கவசங்கள் எவ்வளவு இருக்கிறது, தனிநபர் பாதுகாப்பு கவச உடையின் எண்ணிக்கை போன்ற பல்வேறு விஷயங்கள் இன்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

மேலும், அவசர ஊர்திகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாதுகாப்பு நடவடிக்கையாக, முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, 64,281 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் இருக்கிறது. இதில், ஆக்சிஜென் வசதிகளுடன் கூடியவை 33,664 படுக்கைகள் உள்ளது.

இதோடு, 7,797 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, 24,601 அச்சிடேன்ட் கான்செண்ட்டர்ஸ், 260 பி.எஸ்.எ. பிளான்ட், 130 அச்சிடேன்ட் சேமிப்பு கலன்கள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்கு பின், மருத்துவ வசதிகளை 10 மடங்காக தமிழக அரசு அதிகரித்துள்ளது.

அதோடு, அரசின் வசம் 78 இடங்களிலும், 264 தனியார் இடங்களிலும், ஆகமொத்தம் 342 இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில், நாளொன்றிற்கு மூன்று லட்சம் பேர் வரை இவைமூலம் பரிசோதனை செய்ய இயலும்.

இனிமேல், தினந்தோறும் இந்த பரிசோதனையின் எண்ணிக்கை கூடுதல் ஆக்குகின்ற வரையில், 11,000 பேர் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, லட்சக்கணக்கில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, ஏனென்றால் அந்த நேரங்களில் பாதிப்பு கூடுதலாக இருந்தது.

ஆனால், தற்போது கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனித்தனி நபர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தனிநபர்களுக்கான பாதிப்பை கண்டறியும்போது, அதற்கான அறிகுறிகள் இருக்கும்போது மட்டுமே, இந்த ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே தமிழ்நாடு முழுவதிலும் இந்த பரிசோதனை செய்யப்படுகின்ற நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, அல்லது மருத்துவ வசதிகளின் கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பதாக இருந்தாலும் சரி, தற்போது சரியாக நடைபெறுகிறது", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Coronavirus Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment