அவசர பயண பாஸ் : அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் வழங்கலாம்

கொரோனா நெருக்கடி காரணமாக, மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதற்கு மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக, மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், குடும்ப நபர்களின் இறப்பு, திருமணம் அல்லது அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்ட ங்களுக்கிடையோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் சென்னை பெருநகர காவல்துறையிடம் இருந்து அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும்  என்று கூறப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள், அவசர அனுமதி பயணச்சீட்டிற்காக  சென்னை பெருநகர காவல் தலைமையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

இந்த அவசர அனுமதி பயணச் சீட்டு வழங்கும் முறையை தற்போது தமிழக அரசு எளிமையாகியுள்ளது.

நேற்று, வருவாய் செயலாளர் அதுல்யா மிஸ்ரா நேற்று வெளியிட்டஅரசு உத்தரவில்,”முன் நிர்ணயிக்கப்பட்ட திருமணம், இறுதி சடங்கு, மருத்துவ சிகிச்சை போன்ற பொது மக்களின் அவசர பயணம், ஒரு குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குள் இருந்தால், அந்தந்த மாவட்ட வட்டாச்சியரே அவசர அனுமதி பயணச்சீட்டை வழங்கலாம். அத்தகைய பயணம் மாவட்டங்களுக்கிடையே  இருந்தால், சமந்தப்பட்ட  மாவட்ட ஆட்சியர்  அவசர அனுமதி பயணச் சீட்டை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரைப் பொறுத்தவரை, பொது மக்களின் சென்னைக்குள்ளான   அவசர பயண அனுமதிச் சீட்டு வழங்கும் அதிகாரத்தை சென்னை மாநகராட்சியின் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரை சேர்ந்த ஒருவர்,  மாவடங்களுக்கிடையே பயணிக்க வேண்டுமெனில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus pandemic tamilnadu travel emergencies passes from district tahsildar

Next Story
வெளி மாவட்டங்களுக்கு செல்ல பாஸ் – இனி காவல்துறைக்கு பதில் மாநகராட்சி வழங்கும்chennai E pass, Fake e pass, E pass news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com