பீலா ராஜேஷ் பற்றி அவதூறு: சுப.உதயகுமாரன் மீது வழக்குப்பதிவு

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By: April 6, 2020, 12:54:36 PM

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக அரசையும், முதலமைச்சர் பழனிசாமியையும் குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை பகிர்ந்து சுப.உதயகுமார் பதிவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து வடிவீஸ்வரம் கிராம நிர்வாக அதிகாரி மோகன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுப. உதயகுமார் பேஸ்புக் பதிவு

வழக்குகள் வழக்குகள் வழக்குகள்

கடந்த ஏப்ரல் 2ம் தேதி, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன். என்னுடன் காந்தியவாதிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் என்னுடனான போராட்டத்தில் இணைந்தனர். இந்நிலையில், தமிழக காவல்துறை, என் மீது (FIR No. 239/2020 u/s IPC 270 (Sec. 3 of Epidemic Disease Act) & IPC 188 (Sec. 51 of Disaster Management Act) உள்ளிட்ட பிரிவுகளின கீழ் முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தது.

ஏப்ரல் 5 ம்தேதி கொண்டாட தீர்மானிக்கப்பட்ட விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி, கொரோனா நோய்க்கு காரணமாக சொல்லப்படும் ஒரு சமுதாயம் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து தெரிவித்து வரும் செய்தித்தொடர்பாளர் குறித்து குறித்தும் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தேன். நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளது என்பதனடிப்படையிலேயே நான் அந்த பதிவை இட்டேன். தமிழக காவல்துறை, இதற்கும் 286/20 u/s 505 IPC r/w 67 of IT Act-2000 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், இதற்கான காப்பிகள் எனக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

என் மீது ஏற்கனவே IPC 120, 121A பிரிவுகளின் கீழ் 105 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தொடர்பான 37 வழக்குகளுக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 68 வழக்குகள், முதல் தகவல் அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளாக உள்ளன.

இதுமட்டுமல்லாது, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம், ஒக்கி புயல் நிவாரண போராட்டம் தொடர்பான வழக்குகளும் என் மீது போடப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளால் தான் எத்தருணத்திலும் பாதிக்கப்படவில்லை என்றாலும், இந்த வழக்குகள், ஜனநாயகத்தின் இருண்ட எதிர்காலம், மனித உரிமைகள் மறுப்பு போன்றவற்றையே எதிரொலிப்பதால், தனது மனம் கவலை கொள்வதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus s p udayakumar facebook tamil nadu police cases beela rajesh lamp festival

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X