corona virus, social distancing, chennai, chennai corporation, adyar, super markets, covid 19, corona test, ,coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, 5 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளுக்கே பலசரக்கு பொருட்களை டெலிவரி செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னையின் வளசரவாக்கம் பகுதி ( மண்டலம் 11), ஆலந்தூர் (மண்டலம் 12), அடையார் ( மண்டலம் 13), பெருங்குடி ( மண்டலம் 14) மற்றும் சோழிங்கநல்லூர் ( மண்டலம் 15) ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
வளசரவாக்கம் பகுதியில் 56 கடைகளும், ஆலந்தூர் பகுதியில் 12 கடைகளும், அடையார் பகுதியில் 31 கடைகளும், பெருங்குடி பகுதியில் 66 கடைகளும், சோழிங்கநல்லூர் பகுதியில் 28 கடைகள் மட்டுமல்லாது 30 சூப்பர் மார்க்கெட்கள், மக்களின் பலசரக்கு மற்றும் காய்கறிகளின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளின் எண்களை தொடர்பு கொண்டு ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி பலசரக்கு, காய்கறிகள் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக கடைகளின் பெயர்கள் அதன் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
வளசரவாக்கம் பகுதி ( மண்டலம் 11)
ஆலந்தூர் (மண்டலம் 12)
சென்னை சாந்தோம் சாலையில் இயங்கிவந்த நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட், சமூக விலகலை பின்பற்ற வலியுறுத்ததாதன் காரணத்தினால், மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பேமிலி கார்ட் சூப்பர் மார்க்கெட், அரசு நிர்ணயித்த நேரத்தை காட்டிலும் அதிக நேரம் இயங்கியதற்காக இந்த மார்க்கெட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil