பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - எஸ்.பி.பி. சரண் விளக்கம்
S P Balasubramaniam : எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு, தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
S P Balasubramaniam : எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு, தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக, அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
Advertisment
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தேறிவந்த நிலையில், மீண்டும் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு தப்பவில்லை. இந்நிலையில், பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
மீண்டும் கவலைக்கிடம் : இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 14ம் தேதி) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு, தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.