தேசிய அளவிலான சராசரியைவிட, தமிழகத்தில் தான் இரண்டு மடங்கு கூடுதல் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, . இது தேசிய அளவில் 10 லட்சம் அளவிலான மக்களுக்கு 363 பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 694 பேருக்கு என்றளவில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 1,01,874 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் மாதிரிகள் வீதம், 41 ஆய்வகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, தற்போது தினந்தோறும் 7 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் 5 மடங்கு அளவிற்கு அதிக சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் மட்டும் நாள்தோறும் 3,096 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே ஏப்ரல் 21 நிலவரப்படி, அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் தான் 1 மில்லியன் மக்கள் தொகைக்கு 836 சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இது, தமிழகத்தை விட 136 கூடுதல் ஆகும். கேரளாவில் 588 பேருக்கும், மகாராஷ்டிராவில் 665 , குஜராத்தில் 604 மற்றும் கர்நாடகாவில் 438 என்ற வீதத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநில சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது, மருத்துவமனைக்கு வரும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துவதானேலேயே, தமிழகத்தில் அதிக சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இன்புளுயான்சா தொடர்பான தொற்றுக்கள், சுவாச பிரச்சனைகள், மகப்பேறுக்கு வரும் பெண்கள் என அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொற்று பாதிப்பு வாய்ப்பு அதிகம் உள்ள நபர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரது உடல்நலத்திலும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
நாமக்கல், பெரம்பலூர், திருப்பத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் 1 மில்லியன் மக்கள் தொகைக்கு ஆயிரம் பரிசோதனைகள் வீதம் நடத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் கூறியதாவது, மைக்ரோ லெவல் ஸ்கிரீனிங் சோதனைகளே, சென்னையில் அதிகளவில் பரிசோதனைகள் நடக்க காரணமாக உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வார்டுகளில் உள்ள தெருக்களில் உள்ளவர்களின் சோதனை முடிவுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன இதன் காரணமாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்காக அதிகட்சமாக ஒவ்வொரு 35 பேருக்கு என ஒரு டீம் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்புளுயான்சா தொடர்பான சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். அவர்களுக்கு தனியார் மருத்துவனைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. சிலர் தங்களை பற்றிய விபரங்களை மறைத்து வரும் நிலையில், இறுதியாக தங்களை சோதனைக்கு உட்படுத்த முன்வருவதாக அவர் கூறினார்.
கொரோனா விவகாரத்தில் 2 மாதங்களுக்கு முன்பு, தமிழகம் தயாராகவில்லை. ஆனால் இன்று மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மேலும் அதிகளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று உள்ளவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக வைராலஜி நிபுணர் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.