தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 332 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் 93 நபர்கள். மீதமுள்ளவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6278 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (மே 16) தொற்று எண்ணிக்கையில் 74.2 சதவீதத் தொற்று எண்ணிக்கை சென்னையில் உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 10,585 -ல் சென்னையில் மட்டும் 6,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கையில் 74 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .69% என்கிற அளவில் உள்ளது. 3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 33.42 சதவீதமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் 29,100 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 10,585 எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 9,931 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை 8,895 ஆக உள்ளது.
சென்னையைத் தவிர மீதியுள்ள 20 மாவட்டங்களில் 115 பேருக்குத் தொற்று உள்ளது. 13 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.
டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 6,970 பேர்.
மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,13,639.
மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,99,176.
இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 10,585.
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 10,585.
இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 477.
தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 303 பேர். பெண்கள் 174 பேர்.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 939 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,538 பேர்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 74 ஆக உள்ளது.
சென்னை தொடர்ந்து முதலிடம்
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 332 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 5,946 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 6,271ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 6000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் 527, செங்கல்பட்டு 470, கடலூர் 416, அரியலூர் 348, விழுப்புரம் 308, காஞ்சிபுரம் 180, கோவை 146, மதுரை 147, திருவண்ணாமலை 147, பெரம்பலூர் 139, திண்டுக்கல்லில் 121, திருப்பூர் 114 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.