கொரோனா வைரஸ் – தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்

சென்னை பகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களில் 66.67 சதவீதம் பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளனர்.

By: Updated: April 19, 2020, 09:06:49 AM

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நிலவரப்படி, மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல், அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புக்கு உள்ளானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட விபரங்கள் தினமும் மாலை 6 மணியளவில், சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் 18ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளை விட தமிழகத்தில் சிறப்பாக கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது. அதில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று 82 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் அதிகம் :அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கூடுதலாக 3 சோதனை ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக சோதனை ஆய்வகங்களை (31) கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், ஆய்வகத்தை அதிகப்படுத்தி சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் 5363 சோதனைகள் நடத்தப்படுகின்றன. இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேரும், சென்னையில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35,036 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேபிட் பரிசோதனை கிட்களை அதிக விலை கொடுத்து தமிழகம் வாங்கவில்லை. அதனை பரிசோதிக்க முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று முதல் ரேபிட் கிட்கள் மூலம் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் பட்டியலில், சென்னை தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.

ஏப்ரல் 18ம் தேதி நிலவரப்படி

235 பாதிப்புகளுடன் சென்னை முதலிடத்திலும், 128 பேர் உடன் கோவை 2ம் இடத்திலும், 108 பேருடன் திருப்பூர் 3ம் இடத்திலும் உள்ளது. 44 பேருடன் மதுரை 11வது இடத்தில் உள்ளது.

சென்னை மாவட்ட நிலவரம்

 

சென்னையில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 53 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் கொரேனா தொற்றுக்கு இதுவரை 7 பேர் மரணமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டலம் 5 ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 73 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கடுத்த இடத்தில் மண்டலம் 6 திருவிக நகர் பகுதியில், 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு அதிக பாதிப்பு

சென்னை பகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களில் 66.67 சதவீதம் பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus tamil nadu corona infection health department minister vijayabaskar chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X