தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் தலைவர் ஸ்டாலின் வீடியோ அழைப்பின் மூலம் அவர்களிடம் நேரடியாக கலந்துரையாடியுள்ளார். அப்போது இந்த இக்கட்டான தருணத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக மாறி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, கோவை கார்த்தி உள்ளிட்ட கட்சி பிரதிநதிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
மா. சுப்பிரமணியன் : சேவை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை கட்சியின் சார்பாக வழங்கி வருகிறோம்.
சேகர் பாபு : டோர் செக்கப் பண்ணாங்களா என்று ஸ்டாலின் கேட்டதற்கு, மீடியா கவரேஜ்க்குத்தான் அப்படி சொல்லியிருக்காங்க, அப்படி நடந்ததா ஒண்ணும் தெரியலை
கேரளாவை ஒட்டியுள்ள பகுதியின் செயலாளர் : 5 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களிடம் சோதனை நடத்திய பிறகே தொற்று உள்ளதா என்பது தெரியவரும்
கோவை கார்த்தி : சுந்தராபுரம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்,வேறு மாநில, மாவட்ட தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய மாநில அரசுகள் உதவிகள் கிடைக்காத பட்சத்தில், கட்சியின் சார்பில் உதவிகள் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அனைவரிடமும், கொரோனா தொற்று பரவலில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
கொரோனா காலத்தில் திமுக சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்ததாக அந்த டுவிட்டர் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil