தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லாததால் கவர்னர் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கடந்த வாரம் கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது.
இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 5 மணி அளவில் ராஜபவனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் ஆளுநருக்குக் கரோனா சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது, ஆனால், அறிகுறி எதுவும் தெரியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது.
“ஆளுநருக்குக் கரோனா தொற்று உள்ளது. அறிகுறி எதுவும் இல்லை. அவருக்குக் காவேரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு லேசான தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரீதியாக அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.
லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Corona virus tamil nadu governor banwarilal purohit chennai raj bhavan corona infection