பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை - மருத்துவக் குழு
Tamilnadu lockdown : ஊரடங்கை எவ்வளவு நாட்கள் நீட்டிப்பது, எந்த மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவிப்பது, எங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்பதை இக்கூட்டம் முடிந்த பின், முதல்வர் அறிவிப்பார்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Advertisment
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை ( ஜூன் 30ம் தேதி) உடன் முடிவடைய உள்ளநிலையில், மருத்துவக்குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் மேலும் எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை முடிவு செய்ய மருத்துவ நிபுணர் குழுவினருடன் இன்று(ஜூன் 29) முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
மருத்துவக்குழு பேட்டி: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லை. பொது போக்குவரத்தால் நோய் பரவல் ஏற்படுவதாக அரசிடம் தெரிவித்துள்ளோம். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil