தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மருத்துவ சிகி்ச்சை விவரங்கள் குறித்து, பிரதமர் மோடி, தொலைபேசியில் கேட்டு அறிந்தார்.
Advertisment
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு இராண்டாவது இடத்தில் உள்ளது. தினம் தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4000 த்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. நேற்று மட்டுமே 88 நபர்கள் உயிரிழந்து உள்ளனர்
தொலைபேசியில் பேச்சு : இந்நிலையில் இன்று முதல்வர் பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, பிரதமர் மோடியிடம், கொரோனாவை தடுக்க தமிழக அரசு, முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்கிறது. நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்தில் தான் நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil