டோல் ப்ரீ எண்ணை தொடர்பு கொண்டால் மருந்துகள் வீடு தேடிவரும் – அசத்தல் சேவை விரைவில் அறிமுகம்

மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் ஆட்கள், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்களா என்பதை மருந்தகங்கள் உறுதி செய்ய வேண்டுமென்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

By: Published: April 8, 2020, 8:43:24 AM

நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, The Tamil Nadu Chemists and Druggists Association நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இதுதொடர்பாக, இந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் கே. செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாoY, இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்படாமல் இருக்க, அருகிலுள்ள மருந்து விற்பனையகங்களிலிருந்து வீட்டிற்கே மருந்துகளை டோர் டெலிவரி செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதனையடுத்து ஒரு டோல் ப்ரீ எண் உருவாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 40 ஆயிரம் மருந்து விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டோர் டெலிவரி திட்டத்தின் கீழ் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இணைந்துள்ளன. சென்னையில், மட்டும் 75 முதல் 100 கடைகள் இந்த திட்டத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இந்த சேவைகள் துவங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் ஆட்கள், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்களா என்பதை மருந்தகங்கள் உறுதி செய்ய வேண்டுமென்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூத்த குடிமக்கள், ஆதரவின்றி தவிப்பவர்களுக்கு இந்த மருந்துகள் டோர் டெலிவரி சேவை, இனிய வரப்பிரசாதமாக அமையும்.
மருந்துக்கடைகள் மதியம் 1 மணிக்கு மேல் இயங்காது என்ற தகவலை யாரும் நம்பவேண்டாம். அது பொய்ச்செய்தி. திருநெல்வேலி பகுதியில் மட்டும் இந்த நடைமுறை உள்ளது. விரைவில் இந்த பகுதியிலும் முழுநேரமும் செயல்படும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செல்வன் மேலும் கூறினார்.

டாக்டர்களின் பிரிஸ்கிரிப்சன்களை இமெயில் அனுப்புபவர்களுக்கு, மருந்து விற்பனை கடைகள் மருந்துகளை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு வரும் இமெயில்களில் குறிப்பிடப்படும் மருந்துகளுடன், எங்களது மருந்து விற்பனை அனுமதி எண், பெயர் உள்ளிட்ட விபரங்களை இணைத்து அனுப்புவதாக சென்னை நங்கநல்லூர் பகுதியில் மருந்து விற்பனை செய்து வரும் கோகுல் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus tamil nadumedicineshome delivery of medicines covid19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X