corona virus, tamilnadu, chennai, amma unavagam, aavin unit, corona infection, madhavaram, covid 19, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
சென்னையில் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று இருந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மாதவரத்தில் உள்ள ஆவின் பால் மைய ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
தமிழகத்தில், கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் பட்டியலில், சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மே 17ம் தேதி வரை 144 தடைவிதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisment
Advertisements
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் 52 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பணிபுரியும் பணி
யாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவம், அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, மாதவரம் ஆவின் பால் உற்பத்தி மையத்தில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மற்ற பணியாளர்கள் உள்ளே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.. இந்த தகவல் வெளியான நிலையில், பால் விநியோகஸ்தர்கள் பெரும்பாலானோர் மாதவரம் யூனிட்டுக்கு பதிலாக, அம்பத்தூர் யூனிட்டில் இருந்து பால் பெற விரைந்தனர். இதன்காரணமாக, வடசென்னை பகுதியில் உள்ள பெரும்பாலானோருக்கு பால் தாமதமாக கிடைத்தது, பலருக்கு பால் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாதவரம் பால் உற்பத்தி மையமே, வடசென்னை பகுதி மக்களின் 90 சதவீத பால் தேவைகளை பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு பால் விற்பனையாளர் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil