கொரோனா பாதிப்புக்குள்ளான உளவுத்துறை சிறப்பு பிரிவு துறையின் மேலாளர் பலியாகியுள்ள சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சென்னை டிஜிபி தலைமையகத்தில் உளவுத்துறை சிறப்புப்பிரிவு துறை இயங்கி வருகிறது. இந்த துறையின் மேலாளராக இருப்பவர் சந்திரசேகர் ( வயது 58). இவருக்கு கடந்த மே 31ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைந்தது. கொரோனா பரவல் காலம் என்பதால், ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சந்திரசேகருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே வந்த நிலையில், அவருக்கு சுவாசித்தலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
Advertisment
Advertisements
பிரேத பரிசோதனைக்குப்பிறகு, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சந்திரசேகர், சக ஊழியர்கள் மட்டுமல்லாது அனைவரிடமும் இனிமையாக பழகக்கூடியவர் என்று சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil