கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
Advertisment
தமிழகத்தில் கொரோனா தொற்று மிக அதிகளவில் பரவி வருகிறது. மாநில அரசும் தேவையான அளவிற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், பாதிப்பு மிக அதிகளவிலேயே உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நான்காவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் ஜூலை 8ந்தேதி முதல் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து குணமடைந்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திமுக எம்எல்ஏ அரசு டிஸ்சார்ஜ் : செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ஆர்.டி.அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளித்த நிலையில் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil