Tamil News Today updates : சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஏதும் நேர்ந்தால், யார் பொறுப்பு? பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்த முடிவை, அரசே எடுத்தால் நல்லது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை அரசு செயலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோரில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த, செய்தித்துறை இணை இயக்குனர் உட்பட, 70க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 11லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இன்று மீதி 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்கக, இயக்குநர் உஷாராணிக்கு கொரோனா தொற்று உறுதி
இயக்குநரின் கார் ஓட்டுநர், தனி உதவியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், இயக்குநருக்கும் பரவியது
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
நேற்றைய பரிசோதனை 14,454 பாதிப்பு 1562.
இன்றைய பரிசோதனை 12,421 பாதிப்பு 1685
நேற்றை விட இன்று பரிசோதனை குறைவு, பாதிப்பு அதிகம்.
உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவு 21 பேர்.
இன்று உயிரிழந்தவர்களில் 5 பேர் எந்தவிதமான உடல் உபாதைகளும் இல்லாதவர்கள்!!
உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு வயது 30
தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்த 21 பேரில் 20 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்; ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்..
மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 244 பேர் உயிரிழப்பு; திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 15 பேர் பலியாகியுள்ளனர்..
முதல் முறையாக 20 ஐ தாண்டியது உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று மட்டும் 21 பேர் உயிரிழப்பு
* இதுவரை தமிழகத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர்.
* கடந்த 4 நாட்களில் 75 பேர் உயிரிழப்பு -தமிழக சுகாதார துறை தகவல்
*ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 15 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து
* இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க புதுச்சேரி அரசு முடிவு. அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வர விமான டிக்கெட் விற்பனை ஜூன் 10ம் தேதி காலை 8 மணி முதல் ஏர் இந்தியா இணையதளத்தில் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகம்/துணை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இப்படிப்புகளில் சேருவதற்கான சிப்பெட் ஜெஇஇ 2020 தேர்வுக்கு www.cipet.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அனுப்ப கடைசி தேதி 02.07.2020. இதற்கான இணை நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) 12.07.2020 அன்று நடைபெறும். இப்படிப்புகளில் சேருவது தொடர்பான மேலும் விவரங்களைப் பெற சிப்பெட் மேலாளர் திரு பீர் முகமதுவை 9444622771 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் திரு ஸ்ரீகாந்த் சிரலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள இன்ஸ்ட்டியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி (சிப்பெட்), அடுத்த கல்வியாண்டுக்கான பட்டயம் மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பிளாஸ்டிக் பிராஸசிங் & டெஸ்டிங் முதுநிலை பட்டயப் படிப்பு, பிளாஸ்டிக் மோல்டு டிசைன் பட்டய மேற்படிப்பு, பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி பட்டயப் படிப்பு, பிளாஸ்டிக் டெக்னாலஜி பட்டயப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பலாம்.
கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இதில், அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, நித்யானந்த ராய், அஸ்வின் குமார் செளபே, மண்சுக் மாண்டவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்தியேக தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது.
சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க தொலைபேசி எண் - 044 - 40067108 அழைக்கலாம்.
12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இதில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது எனத் தெற்கு ரயில்வே அறிவிப்பு.
திருச்சி முதல் அரியலூர் - மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி. இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 ஆம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் ஜெ.அன்பழகனுக்கு, சிகிச்சை அளிக்க ஐதராபாத்தில் இருந்து முக்கிய மருந்தினை தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாங்கி அனுப்பியுள்ளார், மருத்துவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த உதவியை அவர் செய்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கான தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற12ஆம் தேதி திறக்க உள்ளார். இதன்மூலம் 3.25 லட்சம் ஏக்கர் நிலப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு குறுவை சாகுபடி விவசாயிகள் பலன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக, தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அரையாண்டு தேர்வவில் பெற்ற மதிப்பெண்ணிலிருந்து 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவிற்காக 20 சதவீத அடிப்படையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆன் லைன் வகுப்புகளால் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும். விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது,
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள், காலி படுக்கைகள் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடக்கும் போதும், அமரும் போதும் ஒரு மீட்டர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; லேசான காய்ச்சல், சளி இருந்தாலே அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 2,56,611லிருந்து 2,66,598 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,095லிருந்து 1,29,215 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 7,135 லிருந்து 7,466 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள,அரசு மருத்துவமனைகளில், கொரோனா பிரிவுகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருவதால், கூடுதலாக,1,500 படுக்கை வசதிகளை, மருத்துவமனைகள் ஏற்படுத்தி வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights