Tamil News Today updates : சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஏதும் நேர்ந்தால், யார் பொறுப்பு? பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்த முடிவை, அரசே எடுத்தால் நல்லது’ என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை அரசு செயலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோரில், கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த, செய்தித்துறை இணை இயக்குனர் உட்பட, 70க்கும் மேற்பட்டோருக்கு, நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலருக்கும், நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Tamil nadu news today updates : பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், 'லேப்டாப்'களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.லேப்டாப், மைக்குடன் கூடிய ஹெட்போன் உள்ளிட்டவை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால், பலரும் லேப்டாப் வாங்க, கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.
சென்னையில் உள்ள,அரசு மருத்துவமனைகளில், கொரோனா பிரிவுகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருவதால், கூடுதலாக,1,500 படுக்கை வசதிகளை, மருத்துவமனைகள் ஏற்படுத்தி வருகின்றன.
Web Title:Corona virus tamilnadu chennai modi india lockdown coronavirus tamil nadu sslc exam
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 11லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இன்று மீதி 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் விற்கப்படும் லேய்ஸ், குர்குரே போன்றவற்றை அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது தமிழக அரசு.
அரசாணை வெளியீடு.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு முடக்கம் என்பது வதந்தியே என கூறினார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் திரும்பியவர்கள் திறன் பயிற்சிக்காக பதிவு செய்ய பிரத்தியேக இணையதளம்
tnskill.tn.gov.in என்ற பக்கத்தில் பதிவு செய்ய வேலைவாய்ப்பு பயிற்சி துறை அறிவுறுத்தல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்
நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம், நாமே தீர்வாக மாறுவோம் - கமல்ஹாசன்
கேரளாவில் மேலும் 91 பேருக்கு கொரோனா தொற்று - 1,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் - 848 பேர் குணமடைந்துள்ளனர்
நீலகிரியில் பிளாஸ்டிக் பாக்கெட் குளிர்பானங்களுக்கு தடை
வரும் ஜூலை 1ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு..
அரசுத் தேர்வுகள் இயக்கக, இயக்குநர் உஷாராணிக்கு கொரோனா தொற்று உறுதி
இயக்குநரின் கார் ஓட்டுநர், தனி உதவியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், இயக்குநருக்கும் பரவியது
பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர் உட்பட 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
மகாராஷ்டிராவில் மேலும் 2,259 பேருக்கு கொரோனா தொற்று - 120 பேர் உயிரிழப்பு
மாநிலத்தில் மொத்த பாதிப்பு 90,787ஆக உயர்வு - 3,289 பேர் உயிரிழப்பு - இதுவரை 42,638 பேர் குணமடைந்துள்ளனர்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் 5 கிமீ சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகிறது என்பது தவறான கருத்து - தமிழக தலைமை வனஉயிரின காப்பாளர்
வனஉயிரின சரணாலய அறிவிக்கையின்படி வேடந்தாங்கல் ஏரியை சுற்றியுள்ள 5 கிமீ தனியார் பட்டா நிலம், சரணாலயமாக அறிவிக்கப்பட்டது
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு மேலும் ரூ.40 லட்சம் ஒதுக்கி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு
கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள ஏற்கனவே ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.51 லட்சம் ஒதுக்கீடு - ராஜ்பவன்
நேற்றைய பரிசோதனை 14,454 பாதிப்பு 1562.
இன்றைய பரிசோதனை 12,421 பாதிப்பு 1685
நேற்றை விட இன்று பரிசோதனை குறைவு, பாதிப்பு அதிகம்.
உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவு 21 பேர்.
இன்று உயிரிழந்தவர்களில் 5 பேர் எந்தவிதமான உடல் உபாதைகளும் இல்லாதவர்கள்!!
உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு வயது 30
அனில் கும்பிளே தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றது ஐசிசி
கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளிச்சிட வைக்க உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!
தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்த 21 பேரில் 20 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்; ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்..
மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 244 பேர் உயிரிழப்பு; திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 15 பேர் பலியாகியுள்ளனர்..
தமிழகத்தில் முதலீடு செய்ய 8 முன்னணி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
முதல் முறையாக 20 ஐ தாண்டியது உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று மட்டும் 21 பேர் உயிரிழப்பு
* இதுவரை தமிழகத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர்.
* கடந்த 4 நாட்களில் 75 பேர் உயிரிழப்பு -தமிழக சுகாதார துறை தகவல்
*ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் 15 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என பரிசோதனையில் உறுதி!
கடந்த 2 தினங்களாக லேசான காய்ச்சல் இருந்ததை அடுத்து இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.
கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் பின் வாங்கியது சீன ராணுவம்
* கல்வான் பகுதியில் சீன ராணுவம் 2.5 கி.மீ. பின் வாங்கியதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல்
* அண்மைக்காலமாக இரு நாட்டு எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றமான சூழல் ஏற்பட்டது
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து
* இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க புதுச்சேரி அரசு முடிவு. அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
சென்னை கிண்டி கிங் பரிசோதனை மையத்தில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு
- அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்பு தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயரக்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார்.
10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான நடைமுறை தனித்தேர்வர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வர விமான டிக்கெட் விற்பனை ஜூன் 10ம் தேதி காலை 8 மணி முதல் ஏர் இந்தியா இணையதளத்தில் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகம்/துணை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மத்திய பிரேதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்புகளில் சேருவதற்கான சிப்பெட் ஜெஇஇ 2020 தேர்வுக்கு www.cipet.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை அனுப்ப கடைசி தேதி 02.07.2020. இதற்கான இணை நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) 12.07.2020 அன்று நடைபெறும். இப்படிப்புகளில் சேருவது தொடர்பான மேலும் விவரங்களைப் பெற சிப்பெட் மேலாளர் திரு பீர் முகமதுவை 9444622771 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் திரு ஸ்ரீகாந்த் சிரலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள இன்ஸ்ட்டியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி (சிப்பெட்), அடுத்த கல்வியாண்டுக்கான பட்டயம் மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பிளாஸ்டிக் பிராஸசிங் & டெஸ்டிங் முதுநிலை பட்டயப் படிப்பு, பிளாஸ்டிக் மோல்டு டிசைன் பட்டய மேற்படிப்பு, பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி பட்டயப் படிப்பு, பிளாஸ்டிக் டெக்னாலஜி பட்டயப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பலாம்.
கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இதில், அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, நித்யானந்த ராய், அஸ்வின் குமார் செளபே, மண்சுக் மாண்டவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் திரு. கமலக்கண்ணன் அறிவித்தார்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்தியேக தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது.
சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க தொலைபேசி எண் - 044 - 40067108 அழைக்கலாம்.
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்றும், ஊர் திரும்பியவர்களுக்கு உரிய பணி வழங்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இதில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது எனத் தெற்கு ரயில்வே அறிவிப்பு.
திருச்சி முதல் அரியலூர் - மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி. இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அரக்கோணம் முதல் கோயம்புத்தூர் வரை வரும் 12 ஆம் தேதி முதல் இன்டர்சிட்டி ரயில் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் ஜெ.அன்பழகனுக்கு, சிகிச்சை அளிக்க ஐதராபாத்தில் இருந்து முக்கிய மருந்தினை தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாங்கி அனுப்பியுள்ளார், மருத்துவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த உதவியை அவர் செய்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கான தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற12ஆம் தேதி திறக்க உள்ளார். இதன்மூலம் 3.25 லட்சம் ஏக்கர் நிலப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு குறுவை சாகுபடி விவசாயிகள் பலன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக, தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அரையாண்டு தேர்வவில் பெற்ற மதிப்பெண்ணிலிருந்து 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவிற்காக 20 சதவீத அடிப்படையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆன் லைன் வகுப்புகளால் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும். விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது,
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள், காலி படுக்கைகள் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகளை அறிய StopCorona இணையதளம் தொடக்கம்; மருத்துவமனையில் காலியாக உள்ள படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் எண்ணிக்கையை அறியலாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைமத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடக்கும் போதும், அமரும் போதும் ஒரு மீட்டர் இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; லேசான காய்ச்சல், சளி இருந்தாலே அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மொத்தமாக 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 2,56,611லிருந்து 2,66,598 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,095லிருந்து 1,29,215 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 7,135 லிருந்து 7,466 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.