தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு 64 ஆயிரத்தை கடந்தது
Corona daily report : சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.
Corona daily report : சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.
coronavirus daily report, covid-19 positive cases today, covid-19 positive cases today new record, corona virus deaths in tamil nadu, கொரோனா வைரஸ் தினசரி ரிப்போர்ட், தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா, tamil nadu covid-19 positive cases, சென்னை, மதுரை, latest tamil nadu coronavirus news, tamil nadu total coronavirus cases near 1 lakh
தமிழகத்தில் நேற்று ( ஜூன் 23ம் தேதி) ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,063 ஆக உயர்ந்துள்ளது
Advertisment
Advertisements
கொரோனாவால் நேற்று 39 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1227பேர் குணமடைந்து மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35, 339 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil