நோய்த் தொற்றைத் தவிர்க்கும் வகையில் இந்த மாதம் கடைசி வரை பஸ்கள் ஓடாது. மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
Advertisment
தமிழகத்தில் அரசு பஸ், தனியார் பொதுபோக்குவரத்து சேவை ஜூலை 15 வரை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த சேவை நிறுத்தம், இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 24.03.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் 31.07.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன், 31.07.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது.
அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil