தமிழகத்தில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா தொற்று – 1 லட்சம் பேர் குணம்

TN Corona daily report : சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.

By: July 15, 2020, 7:14:54 PM

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ( ஜூலை 15 ம் தேதி) ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5 ஆயிரம் பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தம் 41,382 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 17,36,747 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus tamilnadu covid report today corona report today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X