தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது
Advertisment
தமிழகத்தில் இதுவரை இல்லாத அதிக அளவாக நேற்று ( ஆகஸ்ட் 14ம் தேதி) ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,114ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
Advertisment
Advertisements
அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது
கொரோனாவால் 117 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,14,260 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,556 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 70,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 34,43,897 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil