தமிழகத்தில் தீயணைப்பு வண்டிகள் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு: மருத்துவமனைகள், பொது இடங்களில் நடவடிக்கை
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வண்டிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வண்டிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா தொற்று, சமூக பரவலாவதை தடுக்கும் வகையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக விலகலை கடைப்பிடிப்பது குறித்து, அனைத்து மத தலைவர்கள், அவர்கள் சார்ந்த இயக்கங்களின் ஒருமித்த ஆதரவை பெறும் வகையில், மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டன
Advertisment
Advertisements
தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புத் துறை மூலம் ராட்சத லிப்ட்களை பயன்படுத்தி, கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், பொது மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு காய்கறி சந்தை, அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் 150 அடி உயரம் கொண்ட ராட்சத லிப்ட்களை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது என தெரிவித்தார்.
#Update:Took part in the mass disinfection program organised by @SylendraBabuIPS instructed by Hon’ble @CMOTamilNadu. The whole of Royapettah GH was disinfected at 150 ft height.This will continue in other hospitals & public places as part of containment process. #Covid_19#CVBpic.twitter.com/lPip3hsuzJ
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 4, 2020
''தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் 4,500 இடங்களை அடையாளம் கண்டு ராட்சத லிப்ட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது. தீயணைப்புத்துறையின் துணையோடு இந்த வேலை நடைபெறுகிறது. மருத்துவமனை போன்ற இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுகிறார்கள். இந்த நேரத்தில் கிருமிநாசினி தெளிப்பதால், மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பிறருக்கு நோய் பரவுவது தடுக்கப்படும். மருத்துவமனையிலிருந்து பொது இடங்களுக்குச் செல்லும் மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதால், கிருமிநாசினி தெளிப்பது அவசியம்,''என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil