முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 9,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,176 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 64 பேர் இறந்துள்ளனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தாக்கம் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. அதில் முக்கியமாக கோயம்பேட்டில் இருந்து அதிக அளவு கரோனா பரவி உள்ளது. இதனால் கோயம்பேடு தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது.
Advertisment
Advertisements
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8 ஆம் இடத்திலிருந்து 2 ஆம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு #தாங்குமாதமிழகம்” என்று பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு, கமல் ரசிகர்கள் என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.