Advertisment

தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,835 - சென்னை தவிர்த்து 4,846 பேருக்கு கொரோனா

Chennai COVID-19 Cases: சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் புதிய பாதிப்பு 5,835 - சென்னை தவிர்த்து 4,846 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மொத்த 5,397 பேர் உயிரிழந்துள்ளனர்

Corona Virus TN Cases Today: தமிழகத்தில் இன்று (ஆக.,13) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.61 லட்சத்தை கடந்தது.

Advertisment

இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,810 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 25 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,20,355 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 134 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-73) மூலமாக, இன்று மட்டும் 67,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 34 லட்சத்து 99 ஆயிரத்து 300 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,549 பேர் ஆண்கள், 2,286 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,93,226 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,27,100 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர். அதில், 38 பேர் தனியார் மருத்துவமனையிலும், 81 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,397 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,499 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 15 ஆயிரத்து 614 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 64 ஆயிரத்து 467 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40 ஆயிரத்து 274 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,835 பேரில் 989 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,13,058 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,384 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

அரியலூர் - 76

செங்கல்பட்டு - 453

சென்னை -989

கோவை - 289

கடலூர் - 258

தர்மபுரி - 21

திண்டுக்கல் - 141

ஈரோடு -50

கள்ளக்குறிச்சி - 86

காஞ்சிபுரம் - 243

கன்னியாகுமரி - 186

கரூர் - 40

கிருஷ்ணகிரி - 9

மதுரை - 151

நாகை - 71

நாமக்கல் - 47

நீலகிரி - 7

பெரம்பலூர் -31

புதுக்கோட்டை - 131

ராமநாதபுரம் - 60

ராணிப்பேட்டை - 57

சேலம் - 173

சிவகங்கை - 65

தென்காசி - 138

தஞ்சை - 154

தேனி - 286

திருப்பத்தூர் - 64

திருவள்ளூர் - 390

திருவண்ணாமலை - 152

திருவாரூர் - 27

தூத்துக்குடி - 103

திருநெல்வேலி - 189

திருப்பூர் - 64

திருச்சி - 161

வேலூர் - 143

விழுப்புரம் - 104

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment