வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக உள்ளது
Corona Virus TN Reports Today: தமிழகத்தில் இன்று (ஆக.,24) ஒரே நாளில் 6,129 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Advertisment
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,941 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 26 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 140 ஆய்வகங்கள் (அரசு-63 மற்றும் தனியார்-77) மூலமாக, இன்று மட்டும் 70,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 42 லட்சத்து 76 ஆயிரத்து 640 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,611 பேர் ஆண்கள், 2,356 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,32,679 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,52,644 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 456 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 97 பேர் உயிரிழந்தனர். அதில், 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 67 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6,614 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 18 ஆயிரத்து 197 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 17 ஆயிரத்து 812 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 49 ஆயிரத்து 343 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா:
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,234 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1.10 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், சென்னையில் 1,278 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,26,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 387 பேருக்கும், கடலூரில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், சேலத்தில் 273 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 226 பேருக்கும், தேனியில் 193 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,234 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,10,819 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று திருவள்ளூரில் 800 பேரும், கோவையில் 338 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், தேனியில் 295 பேரும், தென்காசியில் 243 பேரும், செங்கல்பட்டில் 238 பேரும், திண்டுக்கல்லில் 222 பேரும், கடலூரில் 218 பேரும், கன்னியாகுமரியில் 206 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil