தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 88 பேர் பலி

COVID-19 Cases Chennai: சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,136 பேருக்கு கொரோனா பாதிப்பு

COVID-19 Cases Chennai: சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,136 பேருக்கு கொரோனா பாதிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 88 பேர் பலி

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

Corona Virus Cases in TN Today: தமிழகத்தில் இன்று (ஜூலை 23) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆகவும், பலி எண்ணிக்கை 3,232 ஆகவும் அதிகரித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,423 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 49 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 62,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 21 லட்சத்து 57 ஆயிரத்து 869 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

ரஜினி இ-பாஸ் வாங்கித்தான் மகள் வீட்டுக்கு சென்றார்… ஆனால்?

Advertisment
Advertisements

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,933 பேர் ஆண்கள், 2,539 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,17,252 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 75,689 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,699 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1.59,384 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 ஆயிரத்து 881 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்" அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு

சென்னை - 1,336

விருதுநகர் - 480

திருவள்ளூர் - 416

தூத்துக்குடி - 415

செங்கல்பட்டு - 375

காஞ்சிபுரம் - 330

மதுரை - 274

நெல்லை-246

கோவை -238

ராணிப்பேட்டை - 214

தி.மலை - 193

திருச்சி - 190

தேனி -188

குமரி -137

க.குறிச்சி-134

தஞ்சை-122

வேலூர் - 117

விழுப்புரம் -112

புதுக்கோட்டை-111

திண்டுக்கல்-107

ராமநாதபுரம்-100

சேலம்-47

கடலூர்-79

திருப்பத்தூர்-74

தென்காசி-68

சிவகங்கை-64

நீலகிரி -59

அரியலூர்-48

நாமக்கல் -40

திருப்பூர்-33

கிருஷ்ணகிரி-31

கரூர்-27

ஈரோடு -20

தர்மபுரி - 19

பெரம்பலூர் - 7

நாகை-4

திருவாரூர்-1

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: