corona virus, corona virus in india, tamil nadu, covid 19, 144 ban, bus, passengers, india, italy, corona infection, mobile phone, computers, gadgets, infection, solar power, solar plates, researchers
ஹாய் பிரெண்ட்ஸ், பாதுகாப்பான இடத்தில் இருக்கீங்களா?. இல்லையென்றால், இன்று மாலை 6 மணிக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு போயிருங்க, பத்திரமா இருங்க.
Advertisment
வாங்க, நாம இன்றைய நிகழ்ச்சிக்கு போவோம்.
மக்களே, கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்கத்தான் அரசு 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும், தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளின் நோக்கமே, மக்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலம், கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பதுதான்.
மக்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். 144 தடை உத்தரவின் காரணமாக பல்வேறு அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துள்ள நிலையில், எல்லாரும் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போவதை போல, புறப்பட்டு செல்கின்றனர். இதன்மூலம் அரசின் நோக்கமே பாழ்பட்டு போகிறது.
Advertisment
Advertisements
மக்களே அரசு நமது நல்லதுக்காகவே சில சட்ட திட்டங்களை வகுக்கிறது. சிந்திப்பீர்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சர்வதேச அளவில் கொலைவெறி நடத்தும் கொரோனாவிடம் மக்கள் காட்டும் மெத்தனம், இத்தாலி நிலையை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிடுமோ என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. ஆனால் மக்கள் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்கவில்லை. தமிழகத்தில் ஒரு நாள் மக்கள் ஊரடங்கில் ஒத்துழைத்தவர்கள், மறுநாளே வழக்கம் போல வெளியில் நடமாடத் துவங்கி விட்டனர்.
இத்தாலி நிலை இந்தியாவிற்கு வேண்டாமே...
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி தொற்றியுள்ள நிலையில், நம்மை மட்டுமல்லாமல் மொபைல்போன், லேப்டாப் மற்றும் தனிப்பட்ட கேட்ஜெட்களையும், கவனமாக பார்த்து கொள்வது மிகவும் அவசியம். மொபைல்போன், லேப்டாப்களில் வைரஸ், பாக்டீரியா பரவுவதற்கான சாத்தியம் அதிகளவு இருப்பதாக, சுகாதார ஆராய்ச்சி அறிக்கைகள் எச்சரிக்கின்றன. மொபைல்போன், லேப்டாப்பில் பாக்டீரியா இருந்தால், கைகளை கழுவினாலும், தொற்று நோயில் இருந்து, பாதுகாத்து கொள்ள முடியாது.இதனால் கேஜெட்களை, மிகவும் சுத்தமாக வைத்துகொள்வது அவசியமாகும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெறும், 13.7 சதவீதமே கிடைத்தது. பிறகு, இரு ஆண்டுகளுக்கு முன், 25.2 சதவீதம் தந்து அசத்தியது. இனி அவ்வளவு தான் என்று நினைத்தால், 27.7 சதவீதம் கொடுத்து விஞ்ஞானிகளை உற்சாகமூட்டியிருக்கிறது, ஒரு சூரிய ஒளித் தகடு தொழில்நுட்பம். கடந்த சில ஆண்டுகளாக நடந்த சோதனைகளில், கிடைக்கும் மின் ஆற்றலின் அளவு படிப்படியாகக் கூடி, சமீபத்தில், 27.7 சதவீதம் என்ற சாதனை அளவை சிலிக்கான்- பெர்ஸ்கோவைட் அடுக்குத் தகடுகள் எட்டியுள்ளன.ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இதோடு நிற்க வில்லை. அடுக்குத் தகடுகள் மூலம், 30 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தயாரித்து, 2023 வாக்கில் சந்தையில் அறிமுகம் செய்யவிருப்பதாக, 'அட்வான்ஸ்டு எனர்ஜி மெட்டீரியல்ஸ்' ஆய்விதழில், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சில நடைமுறைகளை சுகாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.என்னென்ன செய்யலாம்?* மொபைல்போனில் இருந்து பேச, 'ஹெட்போன்'களை பயன்படுத்தலாம். இது, முகத்துக்கு வைரஸ் செல்வதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
வாழ்த்துக்கள்..
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். வணக்கம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil