Advertisment

குணமடையும் நெல்லை : ஒரே நாளில் 13 நபர்கள் கொரோனாவில் இருந்து நலம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பட்டியலில் நெல்லை ஆறாவது இடத்தில் உள்ளது.

author-image
WebDesk
Apr 15, 2020 12:40 IST
Coronavirus 13 patients cured and discharged from Nellai Government hospital

Coronavirus 13 patients cured and discharged from Nellai Government hospital : கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக இந்தியாவில் பரவி வருகிறது. நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதே நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisment

நெல்லையில் கொரோனா நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 56 ஆக இருந்தது. இன்று அந்த நோயாளிகளில் 13 நபர்கள் குணம் அடைந்து தங்களின் வீடுகளுக்கு சென்றனர். ஒருவர் ஏற்கனவே குணமடைந்துள்ளார்.

இவர்கள் 14 பேரும், அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பின் கீழ் குவாரண்டைனில் இருப்பார்கள். இவர்களை இவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : வசதி படைத்தோர்களிடம் திருடி ஏழைகளுக்கு தரும் இத்தாலி கேங்க்ஸ்டர்கள்!

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா வைரஸிற்கு இப்போது சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 42-ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பட்டியலில் நெல்லை ஆறாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சென்னை, கோவை மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Tirunelveli #Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment