தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 ஆனது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

By: Updated: March 21, 2020, 09:43:51 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுஹான் மாகாணத்தில் தோன்றிய புதிய கோரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை அந்நாட்டில் 3,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு 11,900 பேர்களுக்கு மேல் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு நாளும் பலி என்ணிக்கை அதிகரித்துக்கொண்டி போகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் இருந்து வந்த 45 வயது பொறியாளருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்ததில் குணமானதால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் இருந்து சென்னை வந்த இரு இளைஞருக்கும் அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த ஒரு இளைஞருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தாய்லாந்தில் இருந்து வந்த 2 பேருக்கும் நியூஸிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் என ஒரே நாளில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.


இது குறித்து சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. தாய்லாந்திலிருந்து வந்த இருவருக்கும் நியூசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 6 பேரின் பயண வரலாறுகள் வேறுபட்ட பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகளாகும். இது சமூகத்திற்கு இன்னும் பரவவில்லை. புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் . ரெயில்வே விமான நிலையம் துறைமுகம் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகிறோம்.” என கூறி உள்ளார்.

புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 பேரையும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தி சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி, மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், அனைத்து வார சந்தைகள் என மக்கள் கூடும் இடங்கள் அணைத்தையும் மூட உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி அறிவித்தபடி, நாளை நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆக உயர்ந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus 3 positive cases confirmed in tamil nadu covid 19 positive case increased 6 minister vijayabaskar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X