கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணின் சோக டிக்டாக் வீடியோ, வைரலாகி வருகிறது.
Advertisment
அரியலூர் பகுததியை சேர்ந்த 25 வயது இளம்பெண், சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலைபார்த்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
டிக்டாக்கில் பிரபலமான அந்த பெண்ணுக்கு 242 பாலோயர்கள் உள்ளனர். அடிக்கடி டிக்டாக்கில் வீடியோ வெளியிடும் அந்த பெண், இந்த தனிமை வார்டிலும், மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து டிக்டாக் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த மருத்துவ பணியாளர்களை தற்காலிக நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்த பெண் மீண்டும் ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, எனக்கு தொண்டை வலி அதிகமாக உள்ளது. தொடர் இருமலால் பேசுவதற்கு மிகுந்த சிரமப்படுகிறேன். மருத்துவமனையிலிருந்து முட்டை, பழங்கள், சுண்டல் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர். ஆனால், அதனை என்னால் சாப்பிட முடியவில்லை. தொண்டை வலி என்னை பாடாய்படுத்துகிறது. இந்த அறிகுறிகள் எனக்கு கடந்த மார்ச் 30 முதல் உள்ளது. தான் மிகுந்த சிரமத்திற்கிடையே, இந்த தனிமை வார்டில் இருப்பதாக கானா பாடல் வடிவில் இதனை அவர் பாடியவாறு அந்த வீடியோ உள்ளது.
அதிகாரி விளக்கம் : மருத்துவமனையின் உள்ளே வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரியலூர் அரசு மருத்துவமனை சுகாதார அதிகாரி திருமால் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil