தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9000-ஐ நெருங்கியது: சரிபாதி பேர் சென்னையில்!
சென்னைக்கு அடுத்து, அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும் திருவள்ளூரில் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அடுத்து, அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும் திருவள்ளூரில் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக நேற்று 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நேற்று மட்டும் 83 பேர் உள்பட மொத்தம் 2134 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உள்பட மொத்தம் 61 பேர் இறந்துள்ளனர்
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை, சிகிச்சை, தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றை தமிழக அரசின் சுகாதாரத்துறை தினமும் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறது. அந்த வரிசையில் சுகாதாரத்துறையின் இன்றைய அறிக்கை வெளியாகி உள்ளது.
Advertisment
Advertisements
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் மேலும் புதிதாக 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 4 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 8 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஒருவர் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் முடிவு வந்த பிறகு இறந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிர்ழந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில், மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து, அரியலூரில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கும் திருவள்ளூரில் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 8,718 பேரில் இதுவரை 2,134 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த 83 பேர் குணமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"