சென்னையில் கொரோனா எண்ணிக்கை 279: மாவட்ட வாரியாக நிலவரம்
covid-19 Medical Bulletin: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சென்னையில் ஒரேநாளில் ( மே 5ம் தேதி) 279 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
covid-19 Medical Bulletin: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சென்னையில் ஒரேநாளில் ( மே 5ம் தேதி) 279 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Coronavirus District Wise positive Cases: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சென்னையில் ஒரேநாளில் ( மே 5ம் தேதி) 279 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
தமிழ்நாட்டில் இதுவரையில், நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 1,485 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 76 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், தமிழ்நாட்டில் 4,058 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 508 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக நிலை என்ன?
Advertisment
Advertisements
சென்னையில் இன்று 279 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுநாள், வரையில் வெறும் 15 கொரோனா தொற்று எண்ணிக்கை கொண்ட கள்ளக்குறிச்சி மவாட்டத்தில், இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக கடலூர் மாவட்டம் (68) அதிகளவிலான கொரோனா தொற்றை பதிவு செய்திருக்கிறது.
திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், மதுரை,தர்மபுரி, விருதுநகர், பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 1-க உள்ளது.
நேற்று வரை, கொரோனா தொற்று எண்ணிக்கை தொடங்காத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. (குறிப்பு: சில நாட்களுக்கு முன்பு புட்டபர்த்தி கோவிலுக்கு சென்று வந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அவர் சேலம் சோதனை சாவடியில் தடுக்கப்பட்டு, சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். அதனால், அது கிருஷ்ணகிரி மாவவட்ட எல்லையில் சேர்க்கப்படவில்லை )
இன்று மட்டும் தமிழ்நாட்டில் 11,702 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரையில், மொத்தமாக, 1, 65,191 கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பாலின விகித ரீதியாக:
இதுவரை, தமிழ்நாட்டில் 2,745 ஆண்கள், 1,311 பெண்கள், 2 திருநங்கைகள் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பதிவான 508 பேரில், 353 ஆண்கள் , 154 பெண்கள் மற்றும் 1 திருநங்கைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக வரக் கூடிய நோயாளிகள் எண்ணிக்கையை குறைவான நிலையில் பராமரிப்பதற்கு, நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil