சென்னையில் கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால், மருத்துவம் மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் பணிபுரியும் 300 மருத்துவர்களை சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை முடுக்கிவிட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பராமரிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை சென்னைக்கு அனுப்பி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த சுகாதாரத்துறை தயாராக உள்ளது.
கடந்த ஆண்டு, சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளைக் கட்டுப்படுத்த பிற மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டதைப் போல, கொரொனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்தும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்களை சுகாதாரத்துறை சென்னைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால், மருத்துவம் மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் பணிபுரியும் 300 மருத்துவர்களை சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக சேர்க்கப்பட்ட 625 மருத்துவர்கள், 325 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 1,250 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கல்வி முதுகலை முடித்த மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணியில் 550 சேவை சாரா முதுகலை மருத்துவர்கள் இப்போது பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்டாய சுழற்சி பணி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் அத்திப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகள் கொரோனா தடுப்பு பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டு 4,600 படுக்கை வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. அதே போல, எழும்பூரில் உள்ள மண்டல கண் மருத்துவமனையில் 300 படுக்கைகள் உள்ளன.
சென்னையில் மட்டுமல்லாமல், மாவட்டங்களிலும் இதே போன்ற வசதிகள் உருவாக்கப்படுகின்றன. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பராமரிப்பு மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மீண்டும் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களைத் தவிர வேறு, வீட்டுவசதி வாரியத்தின் புதிய கட்டிடங்கள் அல்லது குடிசை மாற்று வாரியம், சமீபத்தில் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படா சிறப்பு மருத்துவமனை கட்டிடங்கள் உள்ளன. ஆனால், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. பெரிய வணிக வளாகங்களும் உள்ளன. கட்டில்கள் மெத்தைகள் ஏற்கனவே அங்கே உள்ளதால் பரவலாக்கப்பட்ட எல்லா இடங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.