வைரஸில் ஏற்பட்ட மாற்றம், கொரோனா அறிகுறி விகிதம் கூடுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Corona virus in chennai : தமிழகத்தில் தற்போது வரை 6 பேர் மட்டுமே வெண்டிலேட்டர் வசதியில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொற்று உள்ளவர்களில் 99 சதவீதத்தினருக்கு அதற்கான அறிகுறி தென்படாமலேயே உள்ளது

By: June 9, 2020, 8:52:26 AM

கொரோனா வைரசில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே, தமிழகத்தில் அதன் அறிகுறி மற்றும் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். கொரோனா அறிகுறியோடு, மருத்துவமனைக்கு செல்பவர்கள் யாருக்கேனும் படுக்கைகள் இல்லை என்று தெரிவித்தால், அந்த மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பான கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் வரதராஜன் மீது சட்டப்படியான நடவடிக்கை்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகள், அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 5 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. அதேபால், ஆக்சிஜன் உபகரணங்களும், வெண்டிலேட்டர் வசதியும் போதுமான அளவில் உள்ளது. கோவிட் மையங்களில், 17,500 படுக்கைகள் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், வேலுமணி, அன்பழகன், காமராஜ், உதயகுமார் மற்றும் பாண்டியராஜன் கொண்ட குழு, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. கொரோனா அறிகுறியுடன் வருபவருக்கு வெண்டிலேட்டர் வசதி வேணுமா என்பதை டாக்டர் தான் முடிவு செய்வதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது வரை 6 பேர் மட்டுமே வெண்டிலேட்டர் வசதியில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொற்று உள்ளவர்களில் 99 சதவீதத்தினருக்கு அதற்கான அறிகுறி தென்படாமலேயே உள்ளது. கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினாலேயே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலருக்கு உடல்வலி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை 10 நாட்களுக்கு மேல் நீடிக்கின்றது. சிலருக்கோ ஓரிரு நாளில் குணமடைந்து விடுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மாநகராட்சி அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி கூறியதாவது, ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் மருந்தை 2 லட்சம் மக்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை புரோபைலாக்சிஸ் உடன் இணைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus chennai covid pandemic minister vijayabaskar governemnt hospitals shortage of beds

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X