நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் - இன்றுமுதல் அமல்
குறிப்பிட்ட பகுதியில் காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் முகாம்களில் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதியில் காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் முகாம்களில் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
coronavirus, chennai, tamilnadu, greater chennai corporation, anti corona plan chennai, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த திட்டத்தின்படி, குறிப்பிட்ட பகுதியில் காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் முகாம்களில் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்த திட்டத்தை பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தில் 120 சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர். எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனையும் நடமாடும் வாகனங்கள் மூலம் எடுக்கப்பட உள்ளன.
சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,488 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவரப்படி 84 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil