Advertisment

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு : தீவிர கண்காணிப்பில் 68 பேர்....

Coronavirus impact in Tamil Nadu : சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus in tamil nadu, coronavirus causes, coronavirus treatment, coronavirus symptoms, chennai airport, coronavirus causes in india, coronavirus infection

coronavirus, coronavirus in tamil nadu, coronavirus causes, coronavirus treatment, coronavirus symptoms, chennai airport, coronavirus causes in india, coronavirus infection

சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

சீனாவில் புதிய வகை வைரஸால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இது வைரல் நிமோனியா போன்று, எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் பகுதியில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பில் சிக்கி பலியாகியுள்ளனர். சமீபத்திய தகவலின்படி, இந்த வைரஸிற்கு novel coronavirus (nCoV) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் சிலருக்கு இந்த பாதிப்பிற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு - சென்னை விமானநிலையத்தில் கண்காணிப்பு வசதிகள் இல்லை : பயணிகள் புகார்

Advertisment
Advertisement

கொரோனா வைரஸ் என்றால் என்ன... அதன் பாதிப்பு உள்ளிட்ட முழு விபரங்கள் இதோ....

கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் பரவாமல் தடுக்க, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும், இணை, துணை சுகாதாரத் துறை இயக்குனர்களுக்கும், பொது சுகாதாரத் துறை சார்பில், பல்வேறு அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சீனாவில் இருந்து வரும், விமான பயணியரை, தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தும்படி, பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பரிசோதித்ததில், 10 நாட்களில், நோய் அறிகுறியுடன், சீனாவில் இருந்து தமிழகத்திற்கு, 68 பேர் வந்துள்ளனர். அவர்களில், 58 பேர், இந்தியர்; 10 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள், தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ஓட்டல்களிலேயே, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

'கொரோனா' வைரஸ் பாதிப்புடன் வருவோருக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்,சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, தனி ஆம்புலன்ஸ் வசதி செய்யப் பட்டு உள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு, கையுறைகள், 'மாஸ்க்' மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.புதிய வகை வைரஸ் என்பதால், புனேவில் உள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து முடிவுகள் பெறப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில், இதுவரை, சீனாவில் இருந்து வந்த, 15 ஆயிரம் பயணியர் சோதனை செய்யப்பட்டு உள்ளனர். அதில், 68 பயணியருக்கு, இந்த நோய் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டதால், அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவர்களில், 10 சீனர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை விமான நிலையத்தில், ஆலோசனை நடத்தினர். பின் அவர் கூறியதாவது, :சீனாவில் இருந்து வரும் பயணியரும், சீனா வழியாக வரும் பயணியரும், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகின்றனர். விமான நிறுவனங்களும், தங்களது விமானத்தில் பயணிப்போருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து, சுயபரிசோதனை படிவத்தை பூர்த்தி செய்து வாங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த படிவத்தில், பயணியர் சீனாவில் இருந்து வருகின்றனரா; தங்களுக்கு, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளனவா என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.சீனா மட்டுமின்றி, இன்னும் ஏழு நாடுகளில், இந்த வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கும், இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணியரை சோதனை செய்ய, ஏற்கனவே மூன்று சிறப்பு குடியுரிமை கவுன்டர்கள் செயல்பட்டு வந்தன; தற்போது, 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில், அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும், விமான பயணியரை, எப்படி கையாள வேண்டும் என, பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

Chennai Airport China Healthy Life Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment