Advertisment

கொரோனா தடுப்பு பணி செய்யும் தூய்மை பணியாளர்கள்; ரூ.10 லட்சம் காப்பீடு கோரி வழக்கு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் காப்பீடு செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, corona, covid-19, coroporation sweeping workers, corporation cleaning workers, கொரோனா தடுப்பு பணி, தூய்மைப்பணியாளர்கள், 10 லட்சம் ரூபாய் காப்பீடு, சென்னை உயர் நீதிமன்றம், health workers, corona fighter, cleaning workers 10 lakhs health insurance, pil filed chennai high court, chennai corporation

இது தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். நேரடி அரசு நியமனம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நியமனம் என இவர்கள் குடிநீர் வடிகால்

வாரியம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில்

பணியாற்றுகிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள் போன்று இவர்களும் தன்னலம் கருதாமல் சேவை செய்து வருகிறார்கள். கொரோனோ போன்ற உயிர்க்கொல்லி வைரஸ் பரவும் இந்த இக்கட்டான நிலையிலும் இவர்கள் தூய்மைப்பணி செய்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு போதிய

நோய் தடுப்பு சாதனங்களோ, உயிர்காக்கும் சாதனங்களோ வழங்கப்படுவதில்லை.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும்,

செவிலியர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு அறிவித்துள்ள தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு எதுவும் அறிவிக்கவில்லை. எனவே, அரசு நியமித்துள்ள மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு 10 லட்சம்

ரூபாய் மருத்துவ காப்பீடு செய்யவேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Chennai Chennai High Court Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment