தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து்கொண்டே வருகிறது. மே 31ம் தேதி, ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. தினசரி கொரோனா வைரஸ் பரிசோதனை, தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை, கொரோனா நோயாளிகளின் சிகிச்சை என கொரோனா வைரஸுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்ட 938 பேரில், சென்னையில் 616 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 82 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 687 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 12,000 ஆக உயர்ந்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus covid 19 cases daily report tamil nadu coronavirus cases report today