கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களை கண்டறிய ஆப்: சென்னை மாநகராட்சி அறிமுகம்
கொரோனா காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்களைக் கண்டறிய புவியியல் வரைபடமொபைல் ஆப்பை இந்தியாவின் முதல் நகரமாக சென்னை மாநகராட்சி பயன்படுத்த உள்ளது. இந்த புதிய மொபைல் ஆப், ஜிசிசி கண்காணிப்பையும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவரகளையும், வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களையும் , சமூக விலகலைப் பின்பற்றாமல் கூட்டம் கூடும் பகுதிகளையும் வரைபடமாக்குகிறது.
கொரோனா காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்களைக் கண்டறிய புவியியல் வரைபடமொபைல் ஆப்பை இந்தியாவின் முதல் நகரமாக சென்னை மாநகராட்சி பயன்படுத்த உள்ளது. இந்த புதிய மொபைல் ஆப், ஜிசிசி கண்காணிப்பையும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவரகளையும், வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களையும் , சமூக விலகலைப் பின்பற்றாமல் கூட்டம் கூடும் பகுதிகளையும் வரைபடமாக்குகிறது.
chennai coroporation fever symptoms using mobile app, coronavirus, கொரோனா வைரஸ், சென்னை காய்ச்சல் அறிக்குறி மேப், covid-19, chennai corporation map, chennai corporation, சென்னை காய்ச்சல் அறிகுறி மொபைல் ஆப், found corona fever symptoms using app, the greater chennai mobile app, fever symptoms
கொரோனா காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிய சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள புவியியல் வரைபட மொபைல் ஆப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
Advertisment
கொரோனா காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்களைக் கண்டறிய புவியியல் வரைபடமொபைல் ஆப்பை இந்தியாவின் முதல் நகரமாக சென்னை மாநகராட்சி பயன்படுத்த உள்ளது.
சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள இந்த புதிய மொபைல் ஆப், ஜிசிசி கண்காணிப்பையும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவரகளையும், வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களையும் , சமூக விலகலைப் பின்பற்றாமல் கூட்டம் கூடும் பகுதிகளையும் வரைபடமாக்குகிறது. இந்த மொபைல் ஆப் ஒரு வாரத்த்துக்குள் லாஞ்ச் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisment
Advertisements
இந்த மொபைல் ஆப்பை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் சென்னை மாநகராட்சியும் இணைந்து உருவாக்கியுள்ளன. இது குறித்து ஆய்வாளர் எம்.பி.அழகு பாண்டிய ராஜா ஊடகங்களிடம் கூறுகையில், "நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களை மட்டுமே அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு நகரத்திலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பூட்டப்பட்டிருப்பதால் அந்த நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பக்கத்து வீட்டுக்காரர்களுக்குகூட தெரியாது. இது சமூக பரவலுக்கு பெரிய காரணமாக இருக்கிறது.” என்று கூறினார்.
கொரோனா காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் பகுதியைக் கண்டறிய உருவாக்கப்பட்டிருக்கும் மேப் மொபைல் ஆப்பை சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். இதன் மூலம், சென்னை மாநகராட்சியில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டிருந்தால் அவர்கள் இந்த ஆப்பை கிளிக் செய்து, அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களின் புவியியல் இருப்பிடத்தை பெறுவோம். சென்னை மாநகரத்தில் அதிகமான மக்கள் காய்ச்சல் அறிகுறிகளுடன் வழக்கத்துக்கு மாறாக கூட்டமாக இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து உடனடியாக அங்கே மாநகராட்சி பணியாளர்களை அனுப்பலாம் என்று எம்.பி. அழகு பாண்டிய ராஜா கூறுகிறார்.
சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள இந்த மொபைல் ஆப் எந்த பகுதியில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை வரைபடம் மூலம் தெரிந்துகொள்வதன் மூலம் அப்பகுதியில் கூடுதலாக கவனம் செலுத்தி பரவலைத் தடுக்கும் உதவும் என்று மருத்துவ ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"