Coronavirus : கோவிட் -19 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 57 வயது நபர், ஓமந்தூரார் அரசு தோட்டத்திலுள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குளியலறையில் தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடல் புதன்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது.
தற்கொலை செய்துக் கொண்டவர், ராயப்பேட்டையில் வசிப்பவர். கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார். பின்னர் அவர் மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை அதிகாலையில் அவரை வார்டில் காணவில்லை என்று மருத்துவமனையின் ஊழியர்கள் கண்டறிந்தனர். பின்னர், அவரது உடலை குளியலறையில் கண்டுபிடித்தனர்.
மருத்துவமனை அதிகாரிகளின் புகார் அளித்ததன் பேரில், திருவல்லிக்கேணி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். இதுகுறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.
தவிர, 50 வயதான இன்னொரு கோவிட் -19 நோயாளி செவ்வாய்க்கிழமை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாத்தூர் எம்.எம்.டி.ஏ-வைச் சேர்ந்த மணி, கோவிட் -19 போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் நேர்மறையை பரிசோதித்த பின்னர், மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஐ.எம்.சி.யு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில், அவர் ஓய்வறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால், பாதுகாப்புக் காவலர் அரவிந்த் அவரைத் தேடிச் சென்று பார்த்தபோது, அவர் குளியலறை கிரில்லில் தொங்குவதைக் கண்டுள்ளார். அவர் தனது துணியைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியுள்ளார்.
இதனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொரோனாவுக்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டதால், மனச்சோர்வடைந்தார் என்று அங்குள்ளவர்கள் கூறினர். மணிக்கு பல நோய்கள் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இப்படி கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்துக் கொள்வது, பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் பதினைந்து மருத்துவர்கள் நேர்மறை சோதனை செய்துள்ளனர். அவர்களில், நான்கு பேர் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர், மேலும் ஒன்பது பேர் குழு ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட பணிக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். மீதமுள்ளவர்கள் பி.ஜி மருத்துவர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”